நீண்ட பல்லாண்டுகளாய் நீறு பூத்திருந்த எங்கள்
கொண்டாட்ட நினைவுகளும் குதூகலக் கனவுகளும்
தூண்டிய மணிவிளக்காய் சுடர்விடும் இந்நாளில்
மலர்க தமிழீழம்-நம் மக்கள் மனம் நிறைய.
களத்தினில் இளைஞர்கள் களித்து விளையாடிட
மனைகளில் மாதர்கள் மகிழ்ந்து கொண்டாடிட
புத்தெழில் மங்கையர் நர்த்தனம் ஆடிட
புனிதப் போர் வீரர்கள் பொலிவுடன் போரிட
எத்திசை பார்க்கினும் சுதந்திரம் பீறிடும்
தனித் தமிழீழம் மலரட்டும் தரணியில்.
அந்நிய இராணுவக் காலடி அழிந்திடும்
எத்தர்கள் கூட்டத்தின் இருப்பிடம் தகர்ந்திடும்
காவல் தெய்வங்கள் கானகம் நீங்கிடும்
ஈனர் பாசறைகளில் இருள் வந்து சூழ்ந்திடும்
மக்கள் மனங்களில் மகிழ்ச்சியே பொங்கிடும்
மாட்சிமை கொண்ட தமிழீழம் மலரட்டும்.
கோடை காலத்துப் பாலை நிலங்களாய்ப்
பரிதவித்த நாம்
சுதந்திர மழைக்காய் விடுதலை வானை
அண்ணாந்து பார்த்தோம்
மலர்களுக்கும் மாஞ்சோலைகட்கும்
வசந்தங்கள் என்றும் மாறி மாறி வந்து போகும்.
மனிதர்கள் நாம் இழந்து விடும்
வசந்தங்களாம் மகத்தான எம் இளமைக் காலங்கள்
மீண்டும் வராமல் போயே போய் விடும்.
எங்கள் மண்ணின் மழலை மொட்டுக்கள்
விரியும் போதாவது வசந்தம் வரட்டும்
நம்பிக்கை ஒளியே வீசும் காலத்தில்
செந்தீப் பொறியாய் தமிழீழம் மலரட்டும்
காடுகள் வயல்கள் களனிகள் நிறையட்டும்
இரத்தச் சேறுகள் தாண்டியெம் வாழ்வு தொடரட்டும்
போரிடும் புலிகளெம் ஜெயத்தினைத் தேடட்டும்
மார்பினில் சுதந்தர மலர் வந்து வீழட்டும்
ஏனினித் துயரென எம்மக்கள் சிரிக்கட்டும்
பாரினில் சுதந்திர ஈழம் மலரட்டும்.
தீட்சண்யன்
18.2.90
Samstag, November 27, 2004
Abonnieren
Posts (Atom)
பிறேமராஜன் மாஸ்டர் – ஆலமரமும் அதன் விழுதுகளும்…
ஒரு ஆலமரத்தையும் அதன் விழுதுகளையும் அண்ணாந்து பார்ப்பது போல் அந்த நினைவுகளை நான் திரும்பிப் பார்க்கிறேன் – விமலன் பிறேமராஜன் மாஸ்டரின்...

-
வெறுமே நிணமும் நீரும் கொண்ட ஒரு பிண்டமல்ல வீரமும் விடுதலை வேகமும் கொண்டவன் ஈகமும் மனதில் ஈழமும் கண்டவன் தானைகள் தகர்த்தொரு தடவழி சமைத்தவன...
-
ரிவிரச வுடன் நீ திமிர்கொண்டு நின்றாய் -புலியின் முதுகெலும்பு முறிந்ததென்று முகடதிரக் குரைத்தாய்! சத்ஜெய உனக்குச் சறுக்கிப் போய் விட்டாலும்-வ...
-
வென்றிடுவோம் தமிழீழம் விரைவிலே திங்கள் முகம் சிரிக்க தென்றல் தவழ்ந்து வர மஞ்சள் முகந் திருத்தி மங்கையர்கள் வழியனுப்ப அந்திக் கடற்கரையின் மண்...